உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே மேக்கிழார்பட்டியில் செல்லாண்டியம்மன் கோயில் உள்ளது. கிடா வெட்டுவதில் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. மோதல் ஏற்படலாம் என்பதால், வருவாய்த்துறை அதிகாரிகள் கோயிலுக்கு பூட்டு போட்டனர்.கோயிலை திறக்ககோரி, நேற்றுமுன்தினம் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக, நேற்று ஆர்.டி.ஒ., துரைப்பாண்டியன் முன்னிலையில், தாசில்தார் மகபூப்பாட்ஷா, டி.எஸ்.பி., சரவணக்குமார், இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்."கிடா வெட்டு நடத்தபோவதில்லை. தினசரி வழிபாட்டுக்கு கோயிலை திறந்துவிட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து திங்கள் கிழமை பேச்சுவார்த்தை நடத்தி, கோயிலை திறக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.