புனித ஜெபமாலை சர்ச்சில் கொடியேற்றம் 6ம் தேதி தேர் பவனி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2013 10:09
கருமத்தம்பட்டி: புனித ஜெபமாலை சர்ச்சில், தேர்த்திருவிழாவை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நடந்தது.கருமத்தம்பட்டியில் உள்ள புனித ஜெபமாலை மாதா சர்ச், மாவட்ட அளவில் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும்,தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் 10 நாட்கள் நடக்கும். திருவிழாவின் துவக்கமாக நேற்று காலை கொடியேற்றம் நடந்தது. கொடியேற்றத்தை ஒட்டி, சர்ச்சில் சிறப்பு பூஜை மற்றும் ஆராதனைகள் நடந்தன. சிறப்பு கூட்டுபாடற்பலி பூஜை நடந்தது. , சர்ச்சில் தினசரி சிறப்பு ஆராதனை மற்றும் கூட்டு பாடற் பலி பூஜைகள், மறையுரைகள் நடக்கின்றன. கோவை மறை மாவட்ட ஆயர் தலைமையில் சிறப்பு கூட்டு பாடற் பலி பூஜையும் நடக்கிறது. அக்., 6ம்தேதி இரவு 7.00 மணிக்கு மாதா தேர் பவனியும் நடக்கிறது. ஏற்பாடுகளை பங்கு தந்தை தலைமையில், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.