ஆரோக்கியம், ஆத்மபலம், செயல் வெற்றி பெற சூரியனை வணங்கும்படி ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சூரிய நமஸ்காரத்தால் ஆரோக்கியம் உண்டாகும் என்று யோக சாஸ்திரம் கூறுகிறது. கண் கண்ட தெய்வமான சூரியனை, காலையில் நீராடியதும் கிழக்குநோக்கி நின்று வணங்கினால் நாள் முழுவதும் நன்மை உண்டாகும்.