சிவன் உமையவளுக்கு இடப்பாகத்தை அளித்து அம்மையப்பராக விளங்குகிறார். அதனால், சுவாமியின் இடது காதில் அம்பிகையின் அணிகலனான தோடு இடம் பெற்றுள்ளது. தன் முதல் தேவாரப் பாடலான இதில், பசி தீர்க்க பாலூட்டிய அம்பிகையை, சம்பந்தர் நன்றியோடு குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.