Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தோடுடைய செவியன் என்று சிவனைக் ... காலத்தை வீணாக்காதே! காலன் வந்து ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மாங்கல்ய பாக்கியம் தந்த மருத்துவர்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2013
11:09

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் பின்புறம் கொல்லாசத்திரம் இருக்கிறது. இதன் எதிர் வீட்டில் ஆயுர்வேத மருத்துவர் வெங்கடசுப்பிரமணியசாஸ்திரிகள் வசித்து வந்தார். இவர் தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலக தலைமைப் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர். பெரியவர் உத்தரவுப்படி, காஞ்சிபுரத்தில் தங்கியிருந்து, அவர் இடும் கட்டளைகளை நிறைவேற்றி வந்தார். ஒருநாள், அவர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்த பெரியவர் ஜபம், ஆத்மபூஜை செய்து கொண்டிருந்தார். காலை 10 மணி இருக்கும். வயது முதிர்ந்த கணவனும், மனைவியும் பெரியவர் கண் திறக்கட்டும் என அங்கே காத்து நின்றார்கள். அவர் கண்திறந்ததும், அவர் முன்னால் கண்ணீருடன் சென்று வணங்கினார் அந்த அம்மையார். ஏன் அழுகிறீர்கள்? என்று பரிவோடு கேட்டார் பெரியவர். பெரியவா! என் கணவருக்கு உடல்நிலை சரியில்லை.  க்ஷயரோகத்தால் (டி.பி.) அவதிப்படுகிறார். பல டாக்டர்களிடம் மருத்துவம் செய்து விட்டோம். அளவுக்கு அதிகமாகி விட்டதால், இனி குணப்படுத்துவது சிரமம்என சொல்லிவிட்டார்கள். எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தங்களைத் தரிசித்தால் நோய் குணமாகுமென நம்பி, தங்களைச் சரணாகதியடைய வந்துள்ளோம். நான் சுமங்கலியாக வாழ தங்கள் அருள் வேண்டும், என்று மனமுருகிக் கேட்டார். உடனே பெரியவர், அந்த வீட்டின் உள்ளிருந்த ஆயுர்வேத மருத்துவரை அழைத்து, இவர்களின் பிரச்னை என்ன என்று கேட்டு சொல்லுங்கள், என்று உத்தரவு பிறப்பித்தார். மருத்துவரும், அது குறித்து விசாரித்து பெரியவரிடம், இந்த நோய்க்கு வாஸாரிஷ்டம் சாப்பிட்டால் நல்லது, என்றார். சரி... வாஸாரிஷ்டம் தொடர்பாக ஒரு ஸ்லோகம் உண்டு.. ஞாபகம் இருக்கா? என்று மருத்துவரிடம் கேட்டார் பெரியவர். ஞாபகத்துக்கு வரவில்லை, என்றார் மருத்துவர். நன்றாக யோசித்து சொல்லுங்கள், என்ற பெரியவர் முன்னால் சற்று நேரம் நின்ற மருத்துவர், ஞாபகத்துக்கு வர மறுக்கிறதே, என்றார். உடனே பெரியவர் மடை திறந்த வெள்ளமென அந்த ஸ்லோகத்தை அருமையாகச் சொன்னார். வாஸாயாம் வித்யமானாயாம் ஆசாயாம் ஜீவிதஸ்யச ரக்த பித்தீ க்ஷயீகாசீகிமர்த்தம் அவசீதஸி!!ஸ்லோகத்தோடு விடவில்லை, அதற்கு அவர் விளக்கமும் அளித்தார்.வாஸாயாம் என்றால்ஆடாதொடை என்ற இலை. நீண்டகாலம் உயிருடன் இருக்க ஆசையிருக்கிறது என்றால், ஆடாதொடை (ஆடு தொடாத இலை)என்ற மருந்து இருக்கும் போது, எதற்காக ரத்தத்தில் பித்தம், க்ஷயரோகம், காசநோயினால் அவஸ்தைப்பட வேண்டும் என்பது இதன் அர்த்தம், என்றார். இதன்பிறகே, மருத்துவரும் அந்த ஸ்லோகம் நிøவுக்கு வருவதாகச் சொன்னார். பிறகு இரண்டு பாட்டில்  வாஸாரிஷ்டம் (ஆடாதொடை இலை கஷாயம்) கொடுத்து, அந்த தம்பதிகளை ஆசிர்வதித்தார். ஆறுமாதங்கள் கழித்து, அந்த தம்பதிகள் மீண்டும் பெரியரை தரிசிக்க வந்தனர். தனக்கு நோய் குணமாகி விட்டதாக வந்த முதியவர் தெரிவித்தார். அந்த  அம்மையார், தனக்கு மாங்கல்ய பாக்கியம் அளித்த மகா மருத்துவரான பெரியவரை கண்ணீர் மல்க வணங்கினார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar