Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாங்கல்ய பாக்கியம் தந்த மருத்துவர்! அப்பவும் காய்! இப்பவும் காயா!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
காலத்தை வீணாக்காதே! காலன் வந்து கொண்டிருக்கிறான்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2013
11:09

*மனதை எப்போதும் தூய்மையான கண்ணாடி போல வைத்துக் கொள். உன்னையே அதில் தெளிவாக பார்த்துக் கொள்.
*எந்தச் செயலைச் செய்தாலும் அதனால் உண்டாகும் புண்ணியம், பாவம் இரண்டையும் கடவுளின் திருவடியில் ஒப்படைத்து விடு.
*நீ நல்லவனாக இருந்தால் இந்த உலகமும் நல்லதாகிவிடும். நினைப்பின்படியே உலகம் நமக்கு காட்சியளிக்கிறது.
*தீயவனையும் உன் நல்லெண்ணத்தால் திருத்தி விட முடியும். கடவுளை வழிபட்டால் கெட்டவனும் மனம் திருந்தி நல்லவன் ஆவான்.
*உண்மையான பக்தனின் கண்களில் கேடு என்பதே தென்படுவதில்லை.
*நல்ல ரத்தம் ஓடும்போதே, இளமையிலேயே கடவுளின் திருவடியைப் பிடித்துக் கொள்.
*அன்பு மயமான உள்ளத்தில் வெறுப்புக்கு இடம் இருக்காது.
*தான் கடைபிடிக்கும் கொள்கையிலிருந்து சிறிதும் பிறழாதவனே நல்ல லட்சியவாதி.
*மன சாந்தியும், தெளிவும் உண்டாக வேண்டும் என நீ விரும்பினால், நேர்மையைப் பின்பற்றி வாழ்வதே நல்லது.
*பிடிவாதத்தால் மனிதன் தனக்குத் தானே துன்பத்தை வரவழைத்துக் கொண்டு அல்லல்படுகிறான். விட்டுக்கொடுப்பவன் வாழ்வில் இனிமையைக் காண்கிறான்.
*நீ செய்த செயல்கள் பற்றி கர்வம் கொள்ளாதே. எந்த நிலையிலும் அடக்கமும், பணிவுமே உனக்கு அவசியம்.
*யாரையும் இழிவாக கருதக் கூடாது. நாம் அனைவருமே கடவுளின் குழந்தைகள்.
*கடவுளுக்குக் கொடுக்கும் காணிக்கைகளில் தலைசிறந்தது தன்னையே கடவுளுக்கு அர்ப்பணிப்பது தான்.
*கடவுளிடம் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவனுக்கு உயிர் கூட ஒரு பொருட்டாக இருக்க முடியாது.
*உபதேசத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், அதன் படி நடப்பது மிகவும் கடினமானது.
*உன் மனத்தை திருத்த முயற்சி செய். உலகமும் தானே திருந்தி விடும். தீய எண்ணங்களால் மனதைக் கெடுத்துக் கொள்ளாதே.
*கடவுளிடம் உன்னை முழுமையாக ஒப்படைத்து விட்டு, நதியைப் போல தங்கு தடையின்றி ஓடிக் கொண்டிரு.
*மனப்போராட்டம் ஓய்ந்து அமைதி பெற வேண்டுமானால், பக்தி செலுத்துவது ஒன்றே வழி.
*கண்ணில் படும் அத்தனை உயிர்களையும் கடவுளின் வடிவமாகக் காண்பதே தவம்.
*பொறுமையும், அமைதியும் உனக்கு இரு கண்களாகஇருக்கட்டும்.
*தவறான வழியில் ஈட்டிய பணத்தால் எப்போதும் துன்பமே உண்டாகும். பிறரை கெடுத்து வாழவோ, நம்பிக்கைத் துரோகம் செய்ய நினைப்பதோ பெரும்பாவம்.
*ஒழுக்கசீலனாக வாழ்ந்தால், ஒப்பற்ற சிறப்பு ஒருவனைத் தேடி வரும். நல்ல மனிதன் இருக்குமிடம் ஒளிமயமாகவே இருக்கும்.
*தன்னைத் தானே அறிந்தவனே, செயற்கரிய செயலாற்றும் வல்லமை பெற்றிருப்பான்.
*காலத்தை வீணாக்கி விரயம் செய்யாதே. காலன் உன் பின்னால் வந்துகொண்டிருக்கிறான்.
*அன்பும், பணிவும் உன் பண்புகளாகட்டும்.  அனைத்தும் நன்மையாகவேமுடியும்.
-சாந்தானந்தர்

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar