பதிவு செய்த நாள்
30
செப்
2013
10:09
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடி தூய மிக்கேல் அதிதூதர் ஆலய விழா செப்.,20ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெற்ற விழாவில் தினமும் நவநாள் திருப்பலியும், நற்கருணையும் நடைபெற்றன. தினமும் மாலை 6மணிக்கு நடைபெற்ற ஜெபமாலை வழிபாட்டில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவின் முக்கிய நாளான எட்டாம் நாள் தேர்ப்பவனி நடந்தது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மிக்கேல் அதிதூதர், அருளானந்தர், ஆரோக்கியமாதா, திரு இருதய ஆண்டவர் ஆகியோர் தனி தனி தேரில் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து இறைமக்களுக்கு காட்சியளித்தனர். நேற்று காலை 8 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலியை செங்குடி பாதிரியார் சாமுஇதயன் நிகழ்த்தினார். மாலை 5 மணிக்கு கொடியிறக்கப்பட்டு விழா நிறைவடைந்தது. விழாவில் கிராம தலைவர் சேவியர்ராஜ், செயலாளர் ஆரோக்கியமோரீஸ், பொருளாளர் சேவியர், ஒன்றிய கவுன்சிலர் மணிமாறன், செங்குடி ஊராட்சி மன்ற தலைவர் செங்கோல், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் சூசை, வரவணி ஊராட்சி தலைவர் விஜயராணிசரவணன், திருவாடானை உதவி தொடக்க கல்வி அலுவலர் ஆரோக்கியசாமி, மிக்கேல்மாறன்,ஜார்ச், முன்னாள் தே.மு.தி.க.,நகர் செயலாளர் அஜ்மீர்கான், பாபு செல்வராஜ், பங்கராஜ், மிக்கேல்ராஜ், தனபாலன், ஜான், ஆரோக்கியசகாயதாஸ், சேவியர்ராஜ், ஹென்றி, ராஜா, இளங்கோ, ஆல்வின் உட்பட பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை செங்குடி பாதிரியார் சாமுஇதயன், பங்கு இறைமக்கள் மற்றும் இளைஞர் மன்றத்தினர் செய்திருந்தனர்.