பதிவு செய்த நாள்
30
செப்
2013
11:09
கோவை: சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் ஆலயத்தில், அசன பண்டிகை விழா நடந்தது.கோவை - திருச்சி ரோடு, சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் ஆலயம் நிறுவி, 15 ஆண்டுகள் நிறைவடைந்து 16வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தேவாலய ஆண்டு விழா அசன பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அன்று சிறப்பு பூஜை, திருப்பலி, பிரார்த்தனை நடைபெறும். அவை நிறைவடைந்த உடன் பொதுமக்களுக்கு, மத வேறுபாடின்றி பொதுவிருந்து பரிமாறப்படும். ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து இவ்விருந்து நடக்கிறது. இந்த ஆண்டின் அசன பண்டிகை, நேற்று விமரிசையாக நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அசைவ விருந்து பரிமாறப்பட்டது. இது தவிர சைவ சாப்பாடும் பரிமாறப்பட்டது. தேவாலயம் சார்பில் கோவையிலுள்ள முதியோர் இல்லம், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பாதுகாக்கும் மையங்களுக்கு நேரில் எடுத்துச்சென்று உணவு பரிமாறப்பட்டது. இதற்காக, 270 ஆடுகள் வெட்டி விருந்துக்கு தயார் செய்யப்பட்டது. 60 மூட்டை அரிசி, 8,000 வாழைத்தார்கள், 1,000 கிலோ கத்தரிக்காய் பயன்படுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பாதிரியார் எபினேசர் மணி, துணை பாதிரியார் ஜெர்ரிராஜ்குமார், ஆலய செயலர் ஜெய்சிங், திருமண்டல உறுப்பினர்கள் பரமானந்தம், சுதன்அப்பாதுரை உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.