திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் தபோவனத்தில் சரத்நவராத்திரி விழா வரும் 5ம் தேதி துவங்கி 10 நாட்கள் நடக்கிறது.திருக்கோவிலூர் தபோவனத்தில் சரத்நவராத்திரி விழாவையொட்டி வரும் 5ம் தேதி மாலை 4.30 மணிக்கு கடஸ்தாபனம் நடக்கிறது. இதனையடுத்து 6ம் தேதி முதல் 13ம் தேதி வரை தினசரி அதிகாலை 5.30 மணிக்கும், மாலை 5.30 மணிக்கும் ஸ்ரீ சக்ர நவாவரண பூஜை, சுவாசினி பூஜை, நவராத்ரி மண்டபத்தில் மேருவிற்கு லட்சார்ச்சனை, ஸ்ரீ ஞானாம்பிகைக்கு சகஸ்சர நாமார்ச்சனை நடக்கிறது.தொடர்ந்து 13ம் தேதி பகல் 1.30 மணிக்கு நவசண்டி ஹோமம், பூர்ணாகுதியும், விஜயதசமி தினமான 14ம் தேதி அதிகாலை 5 மணிக்கு தம்பதி பூஜை நடக்கிறது. தொடர்ந்து நவாவரண பூஜை, லட்சார்ச்சனை பூர்த்தி, அதிஷ்டானத்தில் கடஅபிஷேகம், மகிஷாசுரமர்தினி புறப்பாடு மற்றும் அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தபோவன நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.