திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த சாலை கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.திண்டிவனம் செஞ்சி ரோட்டில் சாலை கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி விநாயகர், பாலமுருகன், ஆஞ்சநேய மூர்த்தி மற்றும் பரிவார மூர்த்திகளான கெங்கையம்மன், விஷ்ணு, பிரம்மா, மகேஸ்வரி, நவ கிரகங்கள் உள்ளிட்ட சன்னதிகளுக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் 20 ம் பட்டம் சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.பூஜைகளை ராதாகுருக்கள் தலைமையிலான குழுவினர் செய்தனர்.