பதிவு செய்த நாள்
01
அக்
2013
10:10
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், கருட சேவை திருவீதி உலா சிறப்பாக நடந்தது. கும்மிடிப்பூண்டி, பஜார் வீதியில் அமைந்துள்ளது பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில். இக்கோவிலில், 24ம் ஆண்டு, புரட்டாசி மாத உற்சவங்கள் சிறப்பாக நடந்தன. சுதர்சன ஹோமம், திருமஞ்சனம், திருக்கல்யாணம், ஊஞ்சல் சேவை, லட்சார்ச்சனை நடைபெற்றன. இறுதி நிகழ்வாக, நேற்று காலை, பெருமாள், கும்மிடிப்பூண்டியின் முக்கிய வீதிகள் வழியாக கருட வாகனத்தில் திருவீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.