கோவளம்: கோவளம் திரவுபதிஅம்மன் கோவிலில் தீமிதி வசந்த உற்சவவிழா நடந்து வருகிறது. விழா கடந்த, 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி பிற்பகல், மகாபாரத சொற்பொழிவு நடந்து வருகிறது. கடந்த 25ந்தேதி முதல் கிருஷ்ணன் ஜலகிரீடை, அரக்கு மாளிகை, வில்வளைப்பு, சித்தராங்கதை திருமணம், சுபத்ரைதிருமணம், துயில் எனும் மகாபாரத நாடகங்கள் பாரதமாதா நாடகக் குழுவினரால் நடத்தப்பட்டு வருகிறது. மகாபாரத நாடகத்தில் கர்ணமோட்சம், 5ம் தேதி, நடக்கிறது. 6ம் தேதி மாலை தீமிதி விழா நடைபெறுகிறது. 7ம் தேதி தருமர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.