படுகரின மக்கள் காலம் காலமாக கொண்டாடி வரும் தெவ்வப்பா திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2013 10:10
நீலகிரி: குந்தா தாலுகாவுக்கு உட்பட்ட கீழ்குந்தா கிராமத்தை சுற்றி 14 படுகரின கிராமங்கள் உள்ளன. ஆண்டு தோறும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் கீழ்குந்தா கிராமத்தில் கடந்த 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அருள்மிகு காடெஹெத்தையம்மன் திருகோயிலில் தெவ்வப்பா திருவிழா படுகரின மக்களால் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. திருவிழாவையொட்டி விரதம் இருப்போரும், கிராம மக்களும் கீழ்குந்தா கிராமத்தில் உள்ள சவுத்த மனையில் இரவு முழுவதும் காடெஹெத்தையம்மனை வழிப்பட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடக்கிறது. காடெஹெத்தையம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சியில் கிராமமே அதிரும் அளவுக்கு பாரம்பரிய உடையணிந்து மேள தாளம் முழங்க பேண்டு வாத்தியம் நிகழ்ச்சியில் மக்கள் உற்சாகமடைகின்றனர். தெவ்வப்பா திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஹரிகட்டுதல் ( புதியதாக விளைந்துள்ள பயிர்களை அம்மனுக்கு படைத்தல் நிகழ்ச்சி) இதில், ஆண்கள் மட்டும் கலந்துகொண்டு, பயிர்களை அம்மனுக்கு படைத்து, இனி மக்கள் செழிப்புடனும், ஆனந்தமாய் வாழ காடெஹெத்தையம்மனுக்கு தரிசனம் செய்கின்றனர்.
கோவையிலிருந்து காலை 5.30 மணி, 10.30 மணி, மதியம் 1.30, மாலை 5.30 மணிக்கு பேருந்து வசதியுள்ளது. ஊட்டி, குன்னூரிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு பேருந்து வசதியுள்ளது.