Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி முதல்நாள் (அக்.5) வழிபாடு! நவராத்திரி மூன்றாம்நாள்(அக்.7) வழிபாடு! நவராத்திரி மூன்றாம்நாள்(அக்.7) ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி இரண்டாம்நாள்(அக்.6) வழிபாடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 அக்
2013
04:10

அம்பிகையை மயில்வாகனம், சேவல் கொடியுடன் அலங்கரிக்க வேண்டும். இவளை கவுமாரி என்றும், குமார கணநாதாம்பா என்றும் அழைப்பர். பக்தர்களின் பாவத்தைப் போக்கி தைரியத்தை அளிப்பவள் இவள். மதுரை மீனாட்சியம்மன் கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலையில் காட்சி தருகிறாள். மதுரையை ஆட்சி செய்த சுகுணபாண்டியன், மறுபிறவியில் கருங்குருவியாகப் பிறந்தான். மற்ற பறவைகள் துன்புறுத்தியதால் காட்டிற்கு பறந்த அக்குருவி, ஒரு மரத்தில் தங்கியது. அங்கு வந்த சிவபக்தர் ஒருவர், சிவநாமத்தை ஜெபிக்க கேட்ட குருவி ஞானம் அடைந்தது. குருவியும் மதுரை கோயிலுக்கு வந்து, குளத்தில் நீராடி ஈசனை வழிபட்டது. சிவனும் குருவிக்கு மந்திர உபதேசம் செய்தருளி, குருவியினத்தில் வலிமை மிக்க வலியன் குருவியாக இருக்க வரமளித்தார். இக்கோலத்தை தரிசித்தால் மன வலிமை உண்டாகும்.

நைவேத்யம்: தயிர் சாதம்
தூவ வேண்டிய மலர்: முல்லை

பாட வேண்டிய பாடல்:
தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால்
இவளே கடவுளர் யாவருக்கும் மேலை இறைவியுமாம்
துவளேன் இனியொரு தெய்வ முண்டாக மெய்த் தொண்டு செய்தே.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 
temple news
மரக்காணம்: மரக்காணம் அடுத்த முன்னுார் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முன்னுார் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு சார்பில், ... மேலும்
 
temple news
சென்னை: தியாக பிரம்ம கான சபா சார்பில், 15வது, ‘சுவாமி தியாகராஜர் ஆராதனை – 2026’ துவக்க விழா மற்றும் விருது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar