பதிவு செய்த நாள்
07
அக்
2013
11:10
கோவை: ஆர்.எஸ்.புரம் டி.வி.சாமி ரோட்டில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் 37வது ஆண்டு நவராத்திரி விழா துவங்கியது. "காமாட்சி நித்ய பூஜா டிரஸ்ட் சார்பில் நடத்தப்படும் நவராத்திரி விழா, கடந்த 4ம் தேதி துவங்கியது; வரும் 15ல் நிறைவடைகிறது. தினமும் காலை கணபதி, வித்யா, சண்டி, விசேஷ ஹோமங்கள் நடக்க உள்ளன. இன்று காலை 6.00 மணிக்கு துர்காலட்சுமி கணபதி ஹோமம், 6:30க்கு சந்தான கணபதி ஹோமம், 7.00க்கு நித்யா வித்யா ஹோமம், 7.30க்கு காமாட்சி அம்மனுக்கு அபிஷேகம் நடக்கின்றன. விழா நாட்களில் லட்சார்ச்சனைகளும், சிறப்பு இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மூலவர், உற்சவருக்கு சிறப்பு அலங்காரங்களும் நடக்க உள்ளன. முக்கிய நிகழ்வான காமாட்சி அம்மன் வீதி உலா, வரும் 14ம் தேதி மாலை 7.00 மணிக்கு நடக்க உள்ளது. அம்மன் வீதி உலா காமாட்சி அம்மன் ஆலயத்தில் துவங்கி, திருவேங்கடசாமி ரோடு, தடாகம் ரோடு, வ.உ.சி., ரோடு வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடையும். 15ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.