வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு கோவில்களில் நவராத்திரி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நவராத்திரி விழா கடந்த 5ம் தேதி துவங்கி வரும் 13ம் தேதி வரை தொடர்ந்து நடந்து வருகிறது. கோவில் வளாகத்தில் கொலு பொம்மை வைக்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பஜனைப்பாடல்கள் பாடப்படுகின்றன. இதே போல், வாழைத்தோட்டம் மாரியம்மன்கோவில், ஐயப்பசுவாமி கோவில், சோலையார் சித்தி விநாயகர் கோவில், கவர்க்கல் காமாட்சி அம்மன் கோவில், சிறுகுன்றா மகாளியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நவராத்திரி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.