ஆமாத்தூர் திருத்தலத்தில் இறைவனும் இறைவியும் எதிரெதிராக அமைந்துள்ளது புதுமை. இந்த கோயிலுக்கு தென்பக்கமுள்ள வட்டப் பாறையில் ஒரு பாம்பின் தலையிருக்க, அதன்வால் அன்னை முத்தாம்பிகையின் திருவடியின் கீழ் நீண்டுள்ளது. இது கல்லில் வடிக்கப்பட்ட பாம்புச்சிலை. சிக்கலான வழக்குகளில் வட்டப்பாறை அம்மன் சன்னதிக்கு வந்து சத்தியம் செய்ய வைப்பது வழக்கம். பொய் சாட்சி சொன்னால் பாம்பு வட்டப்பாறையிலிருந்து வெளிவந்து கடித்து விடுமென்பது நம்பிக்கை!