பாண்டிச்சேரி அருகே நல்லாத்தூரில் அமைந்துள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் நவராத்திரி உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நீண்ட நாட்களாக திருமணமாகாத ஆண்-பெண் இருபாலரும், இங்கு சேவை சாதிக்கும் பெருந்தேவித் தாயாரிடம் தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகள் பிரார்த்தனை செய்துகொண்டால், விரைவில் அவர்களுக்குத் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை!