பதிவு செய்த நாள்
09
அக்
2013
05:10
காளை போல் உழைக்கும் ரிஷபராசி அன்பர்களே!
சனிபகவானும், ராகுவும் 6-ம் இடத்தில் இருந்து நன்மை தரும் இந்த காலத்தில் அவர்களோடு சூரியனும் இணை சேருகிறார். பகைவர்களை எளிதில் வெற்றி கொள்வீர்கள். பொருளாதார வளம் கூடும். உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்விகாரகன் புதனால் காரிய அனுகூலம் எளிதாகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு காண்பர். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவீர்கள். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். ஆனால், அக். 24 முதல் நவ. 14 வரை புதன் வக்கிரம் அடைந்து கன்னி ராசிக்கு மாறுகிறார். இந்த காலம் அவரால் பிற்போக்கான பலனை காணலாம். குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம். அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக பயணம் ஏற்படலாம்.உங்கள் ஆட்சி நாயகன் சுக்கிரன் 7ம் இடமான விருச்சிகத்தில் இருக்கிறார். இதனால் பெண்கள் வகையில் தொல்லை வரலாம். ஆனால் அக்.31 ல், தனுசுவிற்கு சென்று நன்மை தருவார். வீட்டில் வசதி பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் ஆதரவுடன் இருப்பர்.செவ்வாய் கடந்த மாதம் சாதகமான நிலையில் இருந்து முன்னேற்றம் தந்தார். ஆனால் இப்போது அவர் 4-ம் இடத்திற்கு செல்வதால் சேர்க்கை சகவாசத்திற்கு ஆளாகி அவதியுறலாம். உடல்நலத்தில் பாதிப்பு வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை.குருபகவான் உங்கள் ராசிக்கு 2ம் இடத்தில் நின்று பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருக்கிறார். ஆனாலும், அக், 22ல், அவர் வக்கிரம் அடைகிறார். இதனால் அவரால் முன்பு போல் நன்மை தர இயலாது. ஆனாலும் எந்த பிற்போக்கான நிலையும் ஏற்படாது. பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக இருப்பதால் எண்ணற்ற முன்னேற்றங்களை காணலாம்.
நல்ல நாள்: அக்.18, 21,22,23,26,27,28,நவ.3,4,5,6,11,12,13,14
கவன நாள்: நவ.7,8 அதிர்ஷ்ட எண்: 2,7
நிறம்: செந்தூரம்,நீலம், நவ.14க்கு பிறகு வெள்ளை.
வழிபாடு: கேது பகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். நவ. 14 வரை தினமும் காலையில் விளக்கேற்றி வழிபடுங்கள். வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.