பதிவு செய்த நாள்
11
அக்
2013
10:10
பேரூர்: சுண்டப்பாளையம், ஸ்ரீநிவாஸ வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நடக்கிறது. கடந்த 4ம் தேதி, பெரிய திருமஞ்சன நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. பின், அங்குரார்ப்பணம், விஸ்வக்சேனர் திருவீதி உலா, கருட பிரதிஷ்டை நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, 5ம் தேதி காலை கருடகொடி திருவீதி உலா, இரவு இந்திர விமான திருவீதி உலா, 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை சூரியபிரபை, சந்திரபிரபை திருவீதி உலா, கிருஷ்ண அலங்காரம், கருடசேவை நடந்தன. நேற்று காலை சிம்மவாகனம், இரவு வெள்ளையானை வாகன திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து, இன்று காலை 6.45 மணிக்கு, ரதாரோகணம் நடத்தப்பட்டு, காலை 10.00 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை(12ம் தேதி) காலை வெண்ணெய் தாழிச்சேவை, தொட்டி திருமஞ்சனம், வரும் 13ம் தேதி காலை தீர்த்தவாரி, இரவு புஷ்பக விமான சேவை, 14ம் தேதி மாலை பெருமாள் திருவீதி உலா நடக்கிறது. இறுதியாக, வரும் 15ம் தேதி இரவு 7.30 மணிக்கு விடையாற்றி புஷ்பபல்லக்கு நிகழ்ச்சியுடன் விழா முடிகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்துள்ளது.