பதிவு செய்த நாள்
12
அக்
2013
10:10
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி, அம்மன் தேருக்கு, 8 லட்ச ரூபாயில் "பைபர் கண்ணாடியிலான(அகர்லீக் ஷீட்) கூடம், கோயில் நிர்வாகம் அமைத்தது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தேர்கள், கோயில் கிழக்கு ரதவீதியில் தகர கொட்டகையில் வைக்கப்பட்டிருந்தன. இதில் மழைநீர் புகுந்தும், வெயிலால் தேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. மாற்று கூடம் அமைக்க, கோயில் நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி, 8 லட்ச ரூபாயில் "பைபர் கண்ணாடி, பாலிகார்பனேட் சீட் அடங்கிய கூடம் அமைக்கப்படுகிறது. இக்கூடம் பக்கவாட்டு முழுவதும் கண்ணாடியும், மேற்பகுதியில் பாலிகார்பனேட் ஷீட் பொருத்தப்படுகிறது. கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன் கூறியதாவது: சுவாமி, அம்பாளுக்குரிய இரண்டு தேர்களும் மழை, வெயிலில் இருந்து பாதுகாக்க, நவீன பாதுகாப்பு கூடம் அமைக்கப்பட்டுள்ளது. சுற்று பகுதியில் அகர்லீக் ஷீட்(பைபர் கண்ணாடி) பொருத்தி, அதனுள் மின்விளக்கு அமைக்கப்பட உள்ளது. பகல், இரவில் பக்தர்கள் பார்த்து தரிசிக்கலாம். தேரை பாதுகாத்து, சுத்தம் செய்யவும், சுலபமாக இருக்கும், என்றார்.