பதிவு செய்த நாள்
12
அக்
2013
10:10
தளவாய்புரம், சொக்கநாதன்புத்தூர் மாரியம்மன் கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சொக்கநாதன்புத்தூர் மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா, கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் அம்மன் ,பல்வேறு வாகனங்களிள் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.7ம் நாளை முன்னிட்டு, அம்மன் பூ பல்லக்கில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நேற்று நடந்தது.ஊர் பெரியவர்கள் வடம்பிடித்து இழுக்க, தேரானது, நான்கு வீதி வழியாக வந்து, கோயிலை அடைந்தது. தேருக்கு பின், துன்பங்கள் தீரவும்,நோய் குணமடைய வேண்டி, ஆயிரக்கணக்கான ஆண், பெண் சிறுவர்கள், அங்கப்பிரதட்ணம் செய்தனர். பக்தர்களுக்கு குளர்பானம் வழங்கப்பட்டது. ஏற்பாடை உறவின்முறை நாட்டாண்மைகள்,நிர்வாககுழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.