புதுச்சேரி: லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலை அஷ்ய சீரடி சாயிபாபா கோவிலில் சாயிபாபாவின் 95வது மகா சமாதி தின ஆராதனை மற்றும் விளக்கு பூஜை நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு ஸ்ரீசாய் கணபதி சோடச தீப பூஜை நடந்தது. அதைத் தொடர்ந்து, 10:00 மணிக்கு 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட விளக்கு பூஜை நடந்தது. பகல் 12:00 மணிக்கு சாயிபாபாவிற்கு ஆரத்தி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி, சிறிய சாயிபாபா சிலைக்கு, வெள்ளியால் தயாரிக்கப்பட்ட புதிய கவசம் மற்றும் தங்கமுலாம் பூசப்பட்ட சூரிய மற்றும் சந்திரபிரபை பொருத்தும் வைபவம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு சக்தி கலாமன்றம் சார்பில் விஷ்ணு சகஸ்ரநாமம், சாய் பஜன்ஸ் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.