பதிவு செய்த நாள்
15
அக்
2013
10:10
டேராடூன்: அடுத்த மாதம், 18ம் தேதி, பத்ரிநாத் கோவில் நடை சாத்தப்படுவதாக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், சார்தாம் எனப்படும், பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரிக்கு, புனித யாத்திரை மேற்கொள்வர். இந்த ஆண்டு, உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட, பேய்மழை மற்றும் பெருவெள்ளத்தின் காரணமாக, நிறுத்தப்பட்டிருந்த இந்த யாத்திரை, இம்மாதம், 5ல் மீண்டும் துவங்கியது. குளிர்காலம் துவங்குவதையொட்டி, பத்ரிநாத் கோவில் கதவுகள் மூடப்படுவதற்கு முன், இமயமலைத் தொடரில் அமைந்துள்ள, பிற, புகழ்பெற்ற புண்ணியத் தலங்களான, கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களும் மூடப்படுகின்றன. பத்ரிநாத் - கேதார்நாத் கோவில் சமிதி அதிகாரிகள், கோவில் அர்ச்சகர்கள் முன்னிலையில், கோவில் நடைசாத்தும் நாள் மற்றும் நேரம், சமீபத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நவம்பர், 18, இரவு, 7:38 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும் என, முடிவு செய்யப்பட்டுள்ளது.