ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், கடையம் கோயில்களில் கருடசேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2013 10:10
ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், கடையம் பெருமாள் கோயில்களில் கருடசேவை நடந்தது. ஆழ்வார்குறிச்சி வெங்கடேசபெருமாள் கோயிலில் நடந்த கருடசேவையில் காலையில் கும்பஜெபம், வேதபாராயணம், அதனை தொடர்ந்து சுவாமி அம்பாள் விசேஷ அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் சகஸ்கரநாம அர்ச்சனை, தொடர்ந்து சிறப்பு பூஜை இரவு பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளல் நடந்தது. ஆழ்வார்குறிச்சி வெங்கடேசபெருமாள் கோயிலில் சரஸ்வதி பூஜை நாளன்றும் கருடசேவை விழா நடந்தது. ஆம்பூர் வெங்கடாஜலபதி வெங்கடேசபெருமாள், கடையம் நவநீதகிருஷ்ணசுவாமி கோயில், ராமசாமி கோயில் உட்பட கடையம் வட்டார பெருமாள் கோயில்களில் கருடசேவை விழா நடந்தது.