மகாராஜநகரில் நவராத்திரி விழா கர்நாடக சங்கீத இசை கச்சேரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2013 11:10
திருநெல்வேலி: நவராத்திரியை முன்னிட்டு மகாராஜநகர் மகாதேவ சுவாமி, கோமதி அம்பாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் கர்நாடக சங்கீத கச்சேரி நடந்தது. விழாவில் முன்னாள் டெலக்ஸ் இன்ஜினியர் பாலசுப்பிரமணிய தாஸ் கர்நாடக சங்கீத இன்னிசை கச்சேரி நடந்தது. "தசராக மாலிகா வர்ணம், தீட்சதர் க்ருதி "வாதாபி கணபதி, "பாவனகுரு என்ற பாடலை தமிழிலும் பாடினார். பாரதியார் பாடல்களும் பாடப்பட்டன. "நெல்லையப்பர் காந்திமதி பற்றிய பாடல்களும் பாடப்பட்டன. கச்சேரி பாடிய பாலசுப்பிரமணிய தாஸை, சோமசுந்தரம் கவுரவித்தார். ஏற்பாடுகளை குருகுலம் டிரஸ்ட் செய்திருந்தது. 18ம் தேதி பவுர்ணமி விழாவில் சிறப்பு கூட்டு வழிபாடு, புஷ்பாஞ்சலி நடைபெறவுள்ளது.