பதிவு செய்த நாள்
17
அக்
2013
11:10
ஆர்.கே.பேட்டை: மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட, வழிப்போக்கர்களின் ஓய்வு மண்டபம், பராமரிப்பு இன்றி சிதைந்து வருகிறது. இதை, சீரமைக்க வேண்டும் என, வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆர்.கே.பேட்டை - சோளிங்கர் நெடுஞ்சாலையில், ெவள்ளாத்துார் ஓடை பகுதியில், மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட, கல் மண்டபம் ஒன்று உள்ளது. வழிப்போக்கர்கள் ஓய்வு எடுப்பதற்காக, கார்வேட் நகர ராஜாக்களால் கட்டப்பட்ட, இந்த கல் மண்டபம், 1990ம் ஆண்டு வரை, பயன்பாட்டில் இருந்தது.சோளிங்கர் நரசிம்ம பெருமாள் கோவில் சித்திரை தேர் திருவிழாவிற்கு, ஆர்.கே.பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள், நடைபயணம் மேற்கொள்ளும் போது, இந்த மண்டபத்தில், கூழ் வார்க்கப்படுவது வழக்கம்.ஆனால், இந்த மண்டபம் பராமரிக்கப்படாததால், சில ஆண்டுகளாக, இந்த வழக்கம் கைவிடப்பட்டுள்ளது. பாரம்பரிய சின்னமாக விளங்கும் மண்டபத்தை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.