பதிவு செய்த நாள்
17
அக்
2013
11:10
ஆம்பூர்: வேலூர் மாவட்டம், ஆம்பூர் சமயவல்லி சமேத சுயம்பு நாகநாதஸ்வாமி கோவிலில், 51ம் ஆண்டு அன்னாபிஷேக மஹோத்ஸவ விழா, நாளை (18ம் தேதி) காலை, 7 மணிக்கு நடக்கிறது. காஞ்சி சங்கர மடம் சீடர்கள் தலைமையில், மஹோன்யாச ருத்ரபாராயணம் மற்றும் யாகசாலை பூஜை நடக்கிறது. காலை, 10 மணிக்கு, பஞ்சமூர்த்தி அபிஷேகமும், பகல், 12 மணிக்கு, மகா தீபாராதனை, மதியம், 1 மணிக்கு அன்னதானமும் நடக்க உள்ளது. மாலை, 6 மணிக்கு, அன்னாபிஷேக மஹோத்சவ வைபவம், சமயவல்லி அம்பாளுக்கு, கந்தமாதா சிறப்பு அலங்காரமும் நடக்கிறது. இரவு, 7.30 மணிக்கு, இன்னிசை பாட்டு பட்டிமன்றம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, அன்னாபிஷேக விழாக்குழுவினர் செய்துள்ளனர்.