சேலம்: தம்மம்பட்டி காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி கோயிலில் புதன்கிழமையன்று பிரதோஷ விழா நடைபெற்றது. கோயிலில் நந்தீஸ்வரருக்கு சந்தனம், பால், தயிர், தேன் போன்ற பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனைகள் காட்டப்பட்டது. பிரதோஷ பூஜையில் பெரும்பாலான பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.