நெம்மேலி முத்து மாரியம்மன்கோயிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17அக் 2013 12:10
தஞ்சாவூர்: கடந்த திங்கள்கிழமை இரவு தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர்அருகே, நெம்மேலி கிராமத்திலுள்ள மழை முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வழிபாட்டில்அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஜாதி மோதல் இல்லாத சமத்துவ சமுதாயம் மலரவும், மழை பெய்து நாடு வளம் பெறவும் வேண்டி நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.