பெரம்பலூர்: ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழ புரத்தில் முதலாம் ராஜேந்திர சோழனால் மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள சிவலிங்கம் ஒரே கல்லில் 13 அடி உயரமும், 62 அடி சுற்றளவும் கொண்டு கம்பீரமாக காட்சி தருகிறது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பவுர்ணமி நாளில் சிவலிங்கத் திற்கு அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டும் நாளை அன்னாபிஷேகம் நிகழ்ச்சி நடக்கிறது.. இதில் 9 டன் பச்சரிசியில் சாதம் வடித்து படைக்கப்படுகிறது. நீ ராவி அடுப்புகளில் சாதம் வடித்து நூற்றுக்கணக்கான சிவாச்சாரியார்கள் மூலம் கூடை கூடையாக சாதத்தை சுமந்து சென்று சிவலிங்கத்திற்கு சாத்தப்படுகிறது. முன்னதாக அன்று கரும்புச் சாறு, திரவியப்பொடி, பால், தயிர் உள்பட 9 வகையான வாசனை பொருட்கள் திரவி யங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் நடைபெறு கிறது. மாலை 6 மணிக்கு மகா தீபாராதனையும் நடை பெறும். இந்த அன்னாபிஷேகம் பக்தர் களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். மீதம் உள்ள சாதம் அருகில் உள்ள குளங்களில் மீன்களுக்கு உணவாக அளிக்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை காஞ்சி சங்கரமட நிர்வாகிகள் தலைமையில் அன்னாபிஷேக கமிட்டியினர் செய்து வருகிறார்கள்.