பாகம்பிரியாள் சமேத திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் முப்பெரும் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21அக் 2013 12:10
சிவகங்கை: பாகம்பிரியாள் சமேத திருமெய்ஞானபுரீஸ்வரர் திருக்கோயிலில் நவராத்திரி விழா நிறைவைக் கொண்டாடும் வகையில் சாந்தாபிஷேகப் பெருவிழாவும், அன்னாபிஷேக விழாவும், பூச்சொரிதல் விழாவும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் வீணை, புல்லாங்குழல், மிருதங்கவாத்திய இசையஞ்சலியும் மதுரை கலாஷேத்திரா குழுவினரின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து மஹா தீபாராதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது.