பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத்துக்கு லட்சணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்வது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக பாதயாத்திரை பக்தர்களின் வரத்து அதிகரித்துள்ளது. இதற்காக முதல் கட்டமாக மூலச்சத்திரத்தில் இருந்து ஆயக்குடி வரையில் ரூ.6 கோடி செலவில் பழனி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகிலேயே பக்தர்கள் நடத்து செல்ல பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.