நாட்டறம்பள்ளியில் பேருந்து நிலைய மினிலாரி மற்றும் டெம்போ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் 9ஆம் ஆண்டு ஆயுதபூஜை நடைபெற்றது. இதையொட்டி துர்கை அம்மனுக்கு கடந்த 9 நாள்களாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிறைவுநாளான திங்கள்கிழமை துர்கை அம்மனின் சிலை அலங்கரிக்கப்பட்டு மேளம், தாளம் முழங்க முக்கிய வீதிகளில் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திம்மாம்பேட்டையை அடுத்த கனகநாச்சியம்மன் கோயில் அருகே பாலாற்றில் கரைக்கப்பட்டது.