திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கிருத்திகை விழா நேற்று நடந்தது. வடகிழக்கு பருவ மழை தீவிரமாக இருந்த நிலையிலும், பக்தர்கள் மொட்டையடித்து கந்தனை நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். கோவில் முன்பு வாகனங்களுக்கு மாலையும், பூஜையும் செய்தனர்.