பதிவு செய்த நாள்
24
அக்
2013
10:10
நகரி: நகரி அருகே, புக்கை காசி விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், நேற்று, கும்பாபிஷேகம் நடைபெற்றது. புக்கை, காசி விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், திருப்பதி தேவஸ்தானம் மேற்பார்வையில் செயல்படுகிறது. இக்கோவிலுக்கு, கும்பாபிஷேகம் நடத்த, திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, நேற்று காலை, 10:00 மணிக்கு, காசி விஸ்வேஸ்வர சுவாமி கோவிலின், மூலவர் விமான கோபுர கலசங்களின் மீது, புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடைபெற்றது.