திருவண்ணாமலை: செய்யாறு அருகே எல்லையம்மன் கோவில் உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து, பணத்தை திருடி சென்றனர்.செய்யாறு அடுத்த புரிசை கிராமத்தில் உள்ள எல்லையம்மன் கோவிலில், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். இக்கோவிலில் அதே பகுதியை சேர்ந்த தட்சணாமூர்த்தி, 45, என்பவர் பூசாரியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு பூஜைகளை முடித்து விட்டு தட்சணாமூர்த்தி கோவிலை பூட்டி சென்றார்.நேற்று காலைவழக்கம் போல்தட்சணாமூர்த்தி கோவிலுக்கு வந்த போது, கோவில் வெளிப்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் கோவில் உள்ளே சென்று பார்த்த போது, உண்டியல் திறந்து கிடந்தது. மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடி சென்றது தெரிந்தது. அனக்காவூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.