பதிவு செய்த நாள்
24
அக்
2013
10:10
செஞ்சி: கருமாரப்பட்டி வெள்ளையானந்த சுவாமிகளுக்கு 27ம் தேதி முதலாம் ஆண்டு குருபூஜை விழா நடக்க உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கருமாரப்பட்டி ஸ்ரீலஸ்ரீ வெள்ளையானந்த சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்து ஒரு ஆண்டு நிறைவையொட்டி குரு பூஜை விழா இம்மாதம் 26 மற்றும் 27ம் தேதிகளில் நடக்க உள்ளது. 26ம் தேதி மாலை 6 மணிக்கு விநாயகர் பூஜை, கலச ஸ்தாபனம், 108 சங்கு ஆவாகனம், மங்கள திரவிய ஹோமம், தீபாராதனை நடக்க உள்ளது. 27ம் தேதி காலை 5 மணிக்கு கோபூஜை, கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், காலை 7 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், தொடர்ந்து மாலை வரை வசுதாரா ஹோமம், அர்ச்சனை, கலச தீபாராதனை, ஸ்ரீலஸ்ரீ வெள்ளையானந்த சுவாமிகளுக்கு விசேஷ அபிஷேகம், 108 சங்கு அபிஷேகம், பிரதான கலச அபிஷேகம், விசேஷ அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை, சோடச உபச்சாரம், மகா தீபாராதனையும், அன்னப்பெரும் படையல் சாதுக்கள் மகேஸ்வர பூஜை அன்னதானம் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பக்தர்களும், கிராம பொதுமக்களும் செய்துள்ளனர்.