ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பெருவயல் ரணபலி முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நவ.,3ம் தேதி, மாலை 6 முதல் 7 மணிக்குள் காப்புகட்டுதலுடன் துவங்குகிறது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியாக நவ., 8 மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹார லீலையும், மறுநாள் காலை 10.30 முதல் 12 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.