திருச்சி: திருச்சி மலைக்கோட்டை கோவிலில் உள்ள 27 உண்டியல்களை உதவி ஆணையர் (பொறுப்பு) ரத்தினவேல்பாண்டியன், புதுக்கோட்டை மாவட்ட இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் ஜெகநாதன் ஆகியோர் தலைமையில் உண்டியல் திறந்து எண்ணும் பணி தொடங்கியது. இந்த பணியில் கோவில் பணியாளர்களுடன் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் ஈடுபட்டனர். உண்டியல்களில் ரூ.16 லட்சத்து 85 ஆயிரத்து 507 ரூபாய் ரொக்கம், 11 கிராம் தங்கமும், 100 கிராம் வெள்ளியும், 700 வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.