தென்காசி: தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் நாளை (29ம் தேதி) தேரோட்ட திருவிழா நடக்கிறது. தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து தினமும் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்து. திருவிழா நாட்களில் பல்வேறு வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் வீதியுலா நடந்தது. இந்நிலையில் 9ம் திருநாளான நாளை (29ம் தேதி) காலை 8.10 மணிக்கு தேரோட்ட திருவிழா நடக்கிறது. இதில் தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். வரும் 31ம்தேதி காலை 8 மணிக்கு தீர்த்தவாரி, மாலை 5 மணிக்கு தபசுக்காட்சி நடக்கிறது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.