பதிவு செய்த நாள்
28
அக்
2013
10:10
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே உள்ள மறவன்விளை சந்தனமாரியம்மன் கோயிலில் மழை வேண்டி விளக்கு பூஜை நடந்தது. திருச்செந்தூர் அருகே உள்ள மறவன்விளை சந்தனமாரியம்மன் கோவிலில் திருச்செந்தூர் ஒன்றிய அனுமன் சேனா இந்து மக்கள் கட்சி சார்பில் நல்ல மழை வேண்டியும், பயங்கரவாதம் அழிய வேண்டியும், மீண்டும் மதமாற்ற தடைசட்டம் கொண்டு வரவேண்டியும் விளக்கு பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு மகளிரணி விளக்கு பூஜை தலைவர்வடிவு தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுந்தரராஜி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தென்மண்டலத்தலைவர் ரவிகிருஷ்ணன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் முருகன், உடன்குடி ஒன்றியத்தலைவர் பாஸ்கர், மகளிரணி விளக்குபூஜை செயலாளர் பரமேஸ்வரி, துணைச்செயலாளர் வள்ளி, பொருளாளர் சரோஜா, அமைப்பாளர்கள் முனீஸ்வரி, கன்னி, லெட்சுமி, இசக்கியம்மாள் மற்றும் விளக்கு பூஜை கமிட்டி உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.