பழனி கோயிலுக்கு பாதுகாப்பு: திட்ட வரைவு தயாரிக்க கோரிக்கை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28அக் 2013 11:10
பழனி: கோயில் நிர்வாகம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகங்கள் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளன. இந்த ஆக்கிரமிப்பு அகற்றங்களை திருத்தொண்டர் பேரவை நிறுவனர் ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை பார்வையிட்டார். அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் அரை டவுசர், கைலி ஆகியவற்றை பக்தர்கள் அணிந்து வருவதை கட்டாயம் தடுக்க வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் உள்ள வணிக ரீதியான பயன்பாட்டில் உள்ள கடைகள், நிலங்களை மாற்று மதத்தினர் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது. அவர்கள் வழிபடுவதை முறைப்படுத்தி அனுமதிக்கலாம். பழனியில் விழாக் காலங்களில் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க சுற்றுலா பேருந்து நிலையத்துக்கும், சிவகிரிப்பட்டி பைபாஸ் சாலைக்கும் இடையே உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி புதிய சாலை அமைக்கப்படும். கிரிவலப் பாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு முழுக்க, முழுக்க பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். தமிழ்நாட்டில் திருக்கோயில் நிலங்கள் மீது தனியார்களால் போடப்பட்டுள்ள வழக்குகள் சுமார் 13 ஆயிரம் நிலுவையில் உள்ளன. இதில் சில வழக்குகள் சுமார் 15 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. பல வழக்குகளுக்கு எதிர் வாதுரை கூட அரசு ஆகவே இவற்றை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.