வயலூர் முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழா: நவ.3ல் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2013 10:10
திருச்சி: வயலூர் முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 3–ந் தேதி தொடங்கி 7 நாட்கள் நடக்கிறது. முதல் நாளன்று காலையில் கணபதி ஹோமம், மாலையில் காப்பு கட்டுதல், அபிஷேக ஆராதனையும், இரவு சிங்காரவேலவர் பச்சை மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலாவரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 4–ந் தேதி தினமும் காலையில் சிங்காரவேலவர் கேடயத்தில் அமர்ந்து திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், சுப்ரமணிய சுவாமிக்கு லட்சார்ச்சனையும், சண்முகா அர்ச்சனையும் நடக்கிறது. 4–ந்தேதி இரவு சிங்காரவேலவர் சேஷவாகனத்திலும், 5–ந்தேதி இரவு ரிஷப வாகனத்திலும் எழுந்தருளுகிறார். 6–ந்தேதி இரவு அன்ன வாகனத்தில் சிங்காரவேலவர் எழுந்தருளி யானைமுக சூரனுக்கு பெருவாழ்வு அளித்தல் நிகழ்ச்சியும், 7–ந்தேதி இரவு வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி சிங்கமுகசூரனுக்கு பெருவாழ்வு அளித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 8–ந்தேதி நடக்கிறது.