பதிவு செய்த நாள்
04
நவ
2013
11:11
திருத்தணி: தீபாவளியை முன்னிட்டு, ஷீரடி சாய்பாபா கோவிலில், சிறப்பு பூஜைகள் நடந்தன. திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை சாய்நகரில் அமைந்துள்ள, ஷீரடி சாய்பாபா கோவிலில், தீபாவளியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவை ஒட்டி, அதிகாலை, 4:30 மணிக்கு, காகட ஆரத்தி நடந்தது. தொடர்ந்து, காலை, 7:00 மணிக்கு, மூலவருக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. மதியம், 12:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, சந்தியா ஆரத்தியும், இரவு, 9:00 மணிக்கு, சேஜ் ஆரத்தியும் நடந்தது. முன்னதாக, மாலை, 5:00 முதல், இரவு, 8:00 மணி வரை, பஜனை கோஷ்டியினரால், பக்தி பாடல்கள் பாடப் பட்டன.