புதுச்சேரி: வைத்திக்குப்பம் வேங்கடாசலபதி பஜனைக் கூட 50வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, விட்டல் தாஸ் மகராஜின், திவ்ய நாம பஜனை நடந்தது. வைத்திக்குப்பம் வேங்கடாசலபதி பஜனைக் கூட 50வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 8:00 மணியளவில் அண்ணாவின் நாம சங்கீர்த்தன வரவேற்பு நிகழ்ச்சி, 9:00 மணிக்கு துவங்கி பகல் 12:00 மணி வரையில் திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு மேல் பொன்விழா ஆண்டு உபன்யாச நிகழ்ச்சி நடந்தது. இரவு 7:00 மணிக்கு, கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தான ஸ்தாபகர் விட்டல்தாஸ் மகராஜின், திவ்ய நாம பஜனையும், இரவு 9:00 மணிக்கு அண்ணாவின் சம்பிரதாய டோலோத்சவம் நடந்தது.