வேதபுரீஸ்வரர் கோயிலில் நடை திறப்பை முறைப்படுத்திட வேண்டும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05நவ 2013 11:11
திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற திருத்தலமாக திருவோத்தூர் அருள்மிகு பாலகுஜாம்பிகை சமேத அருள்மிகு வேதபுரீஸ்வரர் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் நடை திறத்தல், நடை அடைத்தல் ஆகியவற்றை முறைப்படுத்திட வேண்டும். கோசாலையை சுத்தமாக பராமரிக்க வேண்டும். வெள்ளித் தேர் பணி நடைபெற்று வரும் அறைக்கு பாதுகாப்பை அதிகப்படுத்திட வேண்டும். கோயில் குளத்தை சுத்தம் செய்து பக்தர்களுக்காகத் திறந்து வைக்க வேண்டும் என இந்து முன்னணி அமைப்பாளர் வலியுறுத்தியுள்ளார்.