குன்றக்குடி சண்முக நாத பெருமான் கோவிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05நவ 2013 11:11
குன்றக்குடி: சண்முகநாத பெருமான் கோவிலில் ஒவ் வொரு ஆண்டும் கந்த சஷ்டி விழா 7 நாட்கள் சிறப்பாக நடை பெறும். கடந்த ஞாயிற்று கிழமை இந்த விழா தொடங் கியது. தினசரி முருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், தினசரி இரவு நேரத்தில் முருகன் வள்ளிதெய்வானையுடன் வீதிஉலா வருகிறார். இதே போல் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்தை சேர்ந்த சிவன்கோவிலில் எழுந்தருளியுள்ள சுப்பிர மணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 3-ந்தேதி தொடங்கியது.