பாண்டிய மன்னன் தன் படைபலத்தைப் பெருக்க, குதிரை வாங்கி வரும்படி, தன் அமைச்சர் வாதவூராரை வேண்டினான். பணத்துடன் புறப்பட்ட மாணிக்கவாசகர் வழியில் ஆவுடையார் கோயில் என்ற இடத்துக்குச் சென்றார். அங்குள்ள வெயில் காத்த விநாயகர் கோயில் சத்திரத்தில் அவர் தங்கினார். அன்றிரவு கனவில் தோன்றிய விநாயகர், சிவனுக்குக் கோயில் கட்டும்படி உத்தரவிட்டார். ஆனை சொன்னதால், குதிரைக்கான பணத்தில் மாட்டுக்கு கோயில் வந்தது என்று இதனைச் சொல்வர். உயிர்களாகிய நாமெல்லாம் பசுக்கள். நம்மை உடைமையாக கொண்டிருக்கும் இறைவனாகிய பசுபதியே சிவன். மாடான ரிஷபத்தை வாகனமாகக் கொண்டிருப்பதாலும், இறைவனுக்கு (ஆ)வுடையார் என்று பெயர். தமிழில் ஆ என்றால் மாடு.