சிவன் மாணிக்கவாசகரை ஆட்கொண்டு, தன்னைப் போலவே (சிவமாகவே) ஆக்கினார். இறைவனின் பேரருளை வியந்த நிலையில், இவர் பாடிய பாடல்கள் திருவாசகத்தில் அச்சோ என்ற பதிகமாக இடம்பெற்றுள்ளது. இதில் கடைசிப்பாடலில் நம்மையும் ஒரு பொருளாக்கி நாய் சிவிகை ஏற்றுவித்து அம்மை எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே என்று குறிப்பிடுகி றார். நாய் போல இழிந்த என்னையும் ஒரு பொருளாக மதித்து பல்லக்கில் ஏற்றுவித்த தயாபரன் சிவன். என்னைப் போல புண்ணியத்தை பெறக் கூடியவர் வேறு யாருமில்லையே என்று வியக்கிறார். இந்த பாடலோடு திருவாசகம் நிறைவு பெறுவது குறிப்பிடத்தக்கது. ஒரு பெரிய அருளாளர் தன்னை நாய்க்கு ஒப்பிட்டது, அனைவருக்கும் தாழ்மை வேண்டும் என்பதைக் குறிக்கிறது.